

சூலூர் வட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் செயல்படும் தொழிற்சாலையின் கழிவுகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி தலைமை யில் நேற்று நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பேசினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி: சூலூர் வட்டம் மோப்பிரிபாளை யம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமத் தில் செயல்படும் தொழிற்சாலை களில் இருந்து வெளியேறும் கழிவுகளால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதுடன், சூழல் பிரச்சினைகளால் மக்களும் வேதனைக்குள்ளாகின்றனர். இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைய சேவைகள் (ஊக்குவிப்பு, எளிதாக்குதல்) சட்டம், வரும் ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தை செயல்படுத்துவ தற்கான விதிகள், ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த சட்டத்தில் நெல் உள்ளிட்ட தானிய வகைகள், பருப்பு, எண் ணெய் வித்துகள், நார் வகைகள், வனப் பொருட்கள், பட்டு, இழை, கரும்பு உள்ளிட்ட 110 பொருட்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எந்த சூழ்நிலையிலும் விவசாயி களின் உரிமைகளை பாதிக்காத வகையில், சட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிய வேண்டும்.
குறையும் உணவு தானிய உற்பத்தி
தீத்திபாளையம் பெரியசாமி: கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளால் உணவு தானிய உற்பத்தி குறைந்து வருகிறது. எனவே, நீராதாரங்களை மேம்படுத்தி, வேளாண்மையை ஊக்குவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். கோவை மாவட்டத்தில் பப்பாளி உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, நாட்டு விதைகள், நாற்றுகள் கிடைப்பதில்லை.
தோட்டக்கலைத் துறை மூலமாக விதைகள், நாற்றுகளை மானிய விலையில் வழங்குவதுடன், இயற்கை உரங்கள், உயிர் உரங் களை வழங்கி, வட்டார அளவில் இயற்கை வேளாண்மை ஆலோ சனை வகுப்புகளை நடத்த வேண்டும்.
வெள்ளை ஈ தாக்குதல்
சொக்கனூர் ஈஸ்வரன்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை உட்பட பல்வேறு பயிர்கள் கடுமை யான சேதத்துக்கு உள்ளாகியுள் ளன. இதனால், விவசாயிகள் பொரு ளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகி, வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மற்றும் இதர பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கான நிதியுதவி
மணக்கடவு விவேக்: ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் 40 சதவீத விவசாயிகளுக்குக்கூட நிதியுதவி வழங்கப்படவில்லை. அனைத்து விவசாயிகளும் நிதியுதவியைப் பெறும் வகையில், திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
பழுதான சாலைகள்
பூலுவப்பட்டி ஈஸ்வரன்: கிராமப் பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இத னால், வாகனங்கள் பழுதடைவது டன், விபத்துகளும் நேரிடுகின்றன. வேளாண் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அனைத்து சாலைகளையும் சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டிடக் கழிவுகள்
விவசாயி சண்முகம்: கோவை மாநகராட்சியின் கட்டிடக் கழிவு களை புறநகர்ப் பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் கலப்பதால், நீராதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. கட்டிடக் கழிவுகளை மறு சுழற்சி செய்து, பேவர் பிளாக் கற்களாக தயாரிக்கும் திட்டத்தை கோவை யில் அமல்படுத்த வேண்டும். நீர் நிலைகளிலும், அவற்றின் அருகிலும் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.
விவசாயிகள் வலியுறுத்திய பல்வேறு கோரிக்கைகள் தொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உறுதியளித்தார்.