

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் மாவட்ட அலுவலகம் மீது தாக்குதலில் ஈடுபட்ட எம்பி குமார் மற்றும் 8 பெண்கள் உட்பட அதிமுக வினர் 170 பேர் கைது செய்யப்பட் டனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாகப் பேசியதைக் கண் டித்து திருச்சியில் நேற்று காங்கிரஸ் மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்தை, அதிமுக இளைஞர்- இளம்பெண்கள் பாசறையினர் முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அருணாச்சல மன்றம் பகுதியில் மாநகர காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அதிமுக இளைஞர்- இளம்பெண் கள் பாசறை அமைப்பினர் திருச்சி எம்பி குமார் தலைமையில் அரு ணாச்சல மன்றம் நோக்கி, இளங் கோவனைக் கண்டித்து முழக்கங் களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். அவர்கள் திடீரென காங்கிரஸ் அலுவலகம் மீது கற் கள், செங்கல், முட்டை, தக்காளி, செருப்பு, குச்சிகள், மது பாட்டில் போன்றவற்றை வீசினர்.
இதில், காங்கிரஸ் அலுவலக கண்ணாடிகள் உடைந்தன. கட்சி அலுவலகத்தில் வெளியே வைக் கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை யும் அவர்கள் கிழித்தெறிந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்துக்குள் அதிமுகவினர் நுழைந்துவிடாமல் போலீஸார் தடுத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்பி குமார் மற்றும் 8 பெண்கள் உட்பட அதிமுகவினர் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
காங்கிரஸார் எதிர் போராட்டம்
போராட்டத்தின்போது, அங்கு வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வழக்கறிஞர் சரவணன், வில்ஸ் முத்துக்குமார், ஜிஎம்ஜி மகேந்திரன், ஜெகதீஸ்வரி உள்ளிட்ட சிலர், அதிமுகவினரைக் கண்டித்து முழக் கங்களை எழுப்பியவாறு கம்புகளுடன் அவர்களை நோக்கிச் சென்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து காங்கிரஸ் மாவட் டத் தலைவர்கள் ஆர்.சி.பாபு, ஜெயப் பிரகாஷ் அங்கு வந்தனர். எம்பி குமாரை கைது செய்ய வலி யுறுத்தி முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். மேலும் சாலை மறிய லில் ஈடுபட முயன்ற அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர்.
தாக்குதல் தொடர்பாக எம்பி குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டை காவல் நிலையத்தில் ஆர்.சி.பாபு புகார் கொடுத்தார். மேலும், குமாரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு ஃபேக்ஸ் அனுப்பினார்.