

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வினுசக்ரவர்த்தியை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் இன்று சந்தித்தார்.
இன்று காலை விஜயா மருத்துவமனைக்குச் சென்று வினுசக்ரவர்த்தி உடல் நலம் குறித்து விசாரித்தார் சரத்குமார். மருத்துவர்களிடம் சிகிச்சை விபரங்களை கேட்டறிந்தார்.
சரத் குமாருடன் சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் சென்னை.சி.ராஜா,ஏ.பி.எஸ்.பொன்னரசன், மாவட்ட துணைச்செயலாளர் கிச்சா ரமேஷ் ஆகியோரும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.