கசியும் பால் பாக்கெட்களை மாற்றும் வசதி அறிமுகம்: ஆவின் நிறுவனம் அறிவிப்பு 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஆவின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆவின் பண்ணைகளில் சிறந்த முறையில் பால் பாக்கெட் கள் உற்பத்தி செய்யப்படுகின் றன. இருப்பினும் அவற்றை வாகனங்களில் ஏற்றி விநியோகிக்கும் போது தவிர்க்க முடியாத காரணங்களால் சில பாக்கெட்களில் கசிவு ஏற்படுகிறது. இது தொடர்பான புகார்கள் வருகின்றன.

இதற்கு தீர்வு காணும் வகை யில் கசியும் பால் பாக்கெட்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெற்று மாற்று பால் பாக்கெட்களை அவர்களுக்கு வழங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆவின் பால் பாக்கெட்கள் கசிவு உடையதாக இருந்தால் சிந்தியது போக மீதமுள்ள பாலுடன் அதை வாடிக்கை யாளர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்கள் மற்றும் ஆவின் ஹை டெக் பாலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

கசியும் பால் பாக்கெட்கள் வாங்கப் பட்ட தினத்திலேயே மாற்றப்பட வேண்டும். மேலும் விவரங் களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3300 ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in