

ஒக்கி புயல் தாக்கி 2 ஆண்டு கள் நிறைவடைந்த நிலையில், விவசாயிகளும், மீனவர்களும் அதன் பாதிப்பில் இருந்து மீளமுடி யாமல் தவிக் கின்றனர். வாழை, தென்னை விவசாயம் 30 சதவீத மாக குறைந்துவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2017 நவ.29-ம் தேதி இர வில் வீசிய ஒக்கி புயலை, அவ்வ ளவு எளிதில் மறக்க முடியாது. மறுநாள் 30-ம் தேதி முழுவதும் மாவட்டத்தில் விளைநிலங்களை சூறையாடிய இந்த புயல், கட லில் மீன்பிடித்துக் கொண் டிருந்த மீனவர்கள் பலரின் உயி ருடன் விளையாடியது.
புயல் எச் சரிக்கை தெரியாமலேயே ஆழ் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். 162 மீனவர்கள் விசைப்படகு கவிழ்ந்து உயிரிழந்தனர். இவர் களில், 27 பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.
விவசாயிகளின் வாழ்வாதார மாக திகழ்ந்த பல்லாயிரக்கணக் கான தென்னை, வாழை, ரப்பர் மரங்கள் சாய்ந்து விழுந்து, பேரி ழப்பை ஏற்படுத்தின. புயலின்போது மரம் விழுந்தும், மின்சாரம் தாக்கி யும், வீடுகள் இடிந்தும் 29 பேர் உயிரிழந்தனர். புயலால் உயி ரிழந்த மீனவர்கள் குடும்பத் துக்கு ரூ.20 லட்சமும், அரசு வேலை யும் வழங்கப்பட்டன. புயலால் உயிரிழந்ததாக உறுதிசெய்யப் பட்ட விவசாயிகள் குடும்பத் தாருக்கு தலா ரூ.10 லட்சம் அரசு நிவாரணம் வழங்கியது.
ஒக்கி புயல் தாக்கி 2 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரை மீன்பிடி தொழிலும், விவசாயமும் குமரி மாவட்டத்தில் பழைய நிலைக்கு மீண்டு வரமுடியவில்லை என குமரி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது: சுனாமியை விட, ஒக்கி புயலுக்கு பின்புதான், மீன்பிடி தொழில் மிக வும் நலிந்துவிட்டது.
அதன் பின்னர் இயற்கை சீற்றம் அதிகமாகிவிட் டது. கடற்கரை கிராமங்களில் நூற் றுக்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர். அரசு கொடுத்த நிவாரணம் மட்டுமே அவர் களுக்கு ஆறுதலாக உள்ளது.
உயிரிழப்பையும், பொருள் இழப்பையும் கடற்கரை கிராமங் கள் சந்தித்த பின்பும், நவீன தகவல் தொடர்பு கருவிகள் எங்களிடம் இல்லை. கடலில் மாயமாகும் மீன வர்களை கண்டுபிடிக்க குமரியில் பேரிடர் மீட்பு மையம் ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
குமரி வேளாண் பாசனத் துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறிய தாவது: ஒக்கி புயலின்போது சேதமான குளக்கரைகள், பாசன கால்வாய்கள் இதுவரை சரிசெய் யப்படவில்லை. பயிர் காப்பீடு இழப்புத் தொகையும் விவசாயி களுக்கு முழுமையாக கிடைக்க வில்லை. வாழை ஒன்றுக்கு ரூ.15 முதல் ரூ.30 வரை மட்டுமே வழங்கப்பட்டது. பல லட்சங்களை இழந்த வாழை விவசாயிகள் இன்று விவசாயத்தை கைவிட்டு மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர்
பல ஆயிரம் தென்னைகள் மொட்டையாக நிற்கின்றன. தென்னை விவசாயிகளை மீட்க எந்த நட வடிக்கையும் இல்லை. புயலுக்கு பிறகு தென்னை, வாழை விவசாயம் 30% வீழ்ச்சி அடைந்துள்ளது.
கேரளாவில் ஒக்கிப் புயலுக்குப் பிறகு, பயிர்க் காப்பீடு மற்றும் போதிய நிவாரணங்கள் வழங்கப் பட்டதால், அங்கு ஆர்வத்துடன் விவசாயம் தொடர்கிறது. குமரியில் தென்னை, வாழை, ரப்பர் விவ சாயம் மீண்டும் மேலோங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.