Published : 29 Nov 2019 09:04 PM
Last Updated : 29 Nov 2019 09:04 PM

ஜிடிபி 4.5 சதவீதமாக குறைவு ; திசை திருப்புவதை விட்டு மீழ்வதற்கான வழியை ஆராய்க: ஸ்டாலின்

நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக போய்கொண்டிருக்கும் நிலையில் சாக்குப்போக்கு சொல்வதை விட்டு மீட்டெடுக்கும் வழியில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார நிலைமை குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட விபரத்தில் ஜூலை, செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாக ஜிடிபி குறைந்துள்ளது. அதேபோல, கடந்தாண்டு 2வது காலாண்டில் ஜிடிபி 6.6 சதவீதமாகவும் இருந்தது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 4. 5 சதவீதமாக சரிவை சந்தித்துள்ளது. முதல் காலாண்டில் 5 சதவீதமாக வளர்ச்சி சரிவடைந்த நிலையில், தற்போது மேலும் சரிவடைந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது, நாட்டின் உண்மையான ஜிடிபியானது, 2009-ம் ஆண்டில் 6.4 ஆக இருந்தது. 2014-19 ஆண்டில் 7.5 ஆக இருந்தது. ஆகவே, ஜிடிபி குறைகிறது என்று தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

“ஜி.டி.பி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம்.

இது சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல; முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதார நெருக்கடி.

அரசு, திசைதிருப்புவதை நிறுத்திவிட்டு, இதிலிருந்து மீள்வதற்கான பொருளாதார உத்தியைப் பற்றி சிந்திக்க வேண்டும்”.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

— M.K.Stalin (@mkstalin) November 29, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x