Published : 11 Aug 2015 08:26 AM
Last Updated : 11 Aug 2015 08:26 AM

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தமிழகத்தில் மதுவிலக்கை உடனடி யாக அமல்படுத்த வலியுறுத்தி திமுக சார்பில் மாநிலம் முழுவ தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக் கணக்கான திமுகவினர் பங்கேற்றனர்.

தமிழகமெங்கும் மதுவிலக்கை உடனடியாக அமலுக்குக் கொண்டு வர வலியுறுத்தி தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி முக்கிய இடங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை, சோழிங்கநல்லூரில் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத் தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

வேலூரில் மத்திய மாவட்ட செய லாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். திருப்பத்தூரில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையிலும் திரு வண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய மண்டலத்தில்..

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, மண்ணச்சநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாள ரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாக ராஜன் ஆகியோர் தலைமை வகித் தனர். 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்த நாடு, கும்பகோணம், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட் டையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதேபோல பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய இடங்களி லும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில்..

கோவையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி, திருப்பூர் மாவட் டம் தாராபுரம், உதகை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் நூற்றுக்கணக் கானோர் பங்கேற்றனர்.

தென் மாவட்டங்களில்..

மதுரை மாநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள் சார்பில் அண்ணா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு மாவட்டச் செயலர்கள் வி.வேலுச்சாமி, கோ.தளபதி தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங் கம், முன்னாள் மேயர் பெ.குழந்தை வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

திருமங்கலம், திண்டுக்கல், தேனி, பெரியகுளம் ஆகிய இடங் களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ராமநாதபுரம் அரண்மனை முன் மாவட்ட செயலர் திவாகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் உட்பட திரளா னோர் பங்கேற்றனர். விருதுநகர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர்கள் என்.பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டத்தின்போது ஒப்பாரி வைத்ததாக சுரேஷ்ராஜன் உட்பட 950 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x