கட்டணம் குறைவாக இருப்பதால் வரவேற்பு: 150 ஏசி பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டம் - போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

கட்டணம் குறைவாக இருப்பதால் வரவேற்பு: 150 ஏசி பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டம் - போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

குறுகிய தொலைவுக்குள் இயக்கப் படும் அரசு ஏசி பேருந்துகளுக்கு குறைந்த கட்டணம் வசூ லிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் மேலும் 150 புதிய ஏசி பேருந்துகளை இயக்க திட்ட மிட்டுள்ளதாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழகங் களில் குறுகிய தொலைவில் இருக் கும் நகரங்களை இணைக்கும் வகையில் குறைந்த கட்டண ஏசி பேருந்துகள் கடந்த தீபாவளி பண்டிகையின்போது அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த குறுகிய தொலைவு ஏசி பேருந்துகளுக்கு கட்டணம் குறைவாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து, மேலும் பல்வேறு வழித்தடங்களில் இந்த வகை பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன.

3 மாதங்களில் 150 பேருந்துகள்

இதுதொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளைக் கவரும் வகையில் குறைந்த கட்டணத்தில் புதிய வகை ஏசி பேருந்துகளை இயக்க உள் ளோம். இருக்கைகள் 3+2 என்ற வரிசையில் இருக்கும்.

நீண்ட தொலைவுக்கு இயக்கப்படும் ஏசி பேருந்துகளின் கட்டணத்தை விட, இந்த வகை பேருந்துகளில் கட்டணம் சற்று குறைவு. அதாவது கி.மீ ரூ.1 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் இப் பேருந்துகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், அரசு போக்குவரத்துக் கழகங் களில் 30 சதவீதம் வரை வருவாய் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மேலும் 150 புதிய ஏசி பேருந்துகளை அடுத்த 3 மாதங்களில் இணைக்க உள்ளோம். இதில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மட்டும் 40 ஏசி பேருந்துகள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர, இந்த நிதி ஆண்டில் மேலும் 2 ஆயிரம் புதிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in