Published : 29 Nov 2019 08:45 AM
Last Updated : 29 Nov 2019 08:45 AM

சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட சேவை நிறுவனம் மூலம் குப்பையை அழிக்கலாம்: ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்

சென்னை மாநகரப் பகுதியில் குப்பைகளை அதிக அளவில் உருவாக்குவோர், மாநகராட்சி யால் அங்கீகரிக்கப்பட்ட சேவை நிறுவனங்களைக் கொண்டு, குப்பைகளை மக்கச் செய்தும், மறுசுழற்சி செய்தும் அழிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 4,880 டன் குப்பைகள் உருவாகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி அதிக அளவு குப்பைகளை உருவாக்குவோர் தங்கள் வளாகத் துக்கு உள்ளேயே திடக்கழிவுகளை மக்கச் செய்யவும் மற்றும் மக்காத குப்பையைத் தரம் பிரித்து மறு சுழற்சியாளர்களிடம் ஒப்படைக்க வும் வேண்டும்.

தினமும் 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், 5 ஆயிரம் ச.மீ. பரப்பளவு மற்றும் அதற்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்கள் அதிக அளவு குப்பைகளை உருவாக்குவோராக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிக அளவில் குப்பை களை உருவாக்கும் அடுக்குமாடி

குடியிருப்புகள், கல்வி நிறு வனங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றம் இதர பிற நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கும் திடக்கழிவு களை தாங்களே கையாள வேண் டும் என கேட்டுக் கொள்ளப் படுகிறது.

“நம் திடக்கழிவு நம் பொறுப்பு” என்பதற்கு இணங்க திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் இடங்களிலேயே திடக்கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக வகை பிரித்து அவர்களது வளாகத்துக்கு உள்ளேயே மக்கும் குப்பையைக் கையாள்வதற்கும், மக்காத மற்றும் உலர் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான சேவைகளை வழங்க, சென்னை மாநகராட்சி யால் 30 சேவை வழங்கும் நிறு வனங்கள் ஏற்கெனவே அங்கீ கரிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2-வது கட்டமாக 11 சேவை நிறுவனங்கள் அங்கீ கரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங் களை மாநகராட்சி மண்டல அலு வலகங்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

சேவை வழங்கும் நிறுவனங் களால் வழங்கப்படும் சேவைகளுக் கான கட்டணத்தை, குப்பைகளை உருவாக்குவோர் தீர்மானித்துக் கொள்ளலாம். சேவை வழங்கும் நிறுவனங்களின் சேவையில் குறைபாடு இருந்தால் seswm@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 1913 என்ற புகார் எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x