Published : 29 Nov 2019 08:38 AM
Last Updated : 29 Nov 2019 08:38 AM

அரபு நாட்டில் இருந்து தப்பி வந்தபோது நடுக்கடலில் தமிழக, கேரள மீனவர் 9 பேர் தவிப்பு: விரைவில் மீட்கக்கோரி குடும்பத்தார் வலியுறுத்தல்

அரபுநாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்ட தமிழக, கேரள மீனவர்கள் 9 பேர் விசைப்படகில் தப்பிவரும்போது டீசல் பற்றாக்குறையால் நடுக்கடலில் தவிக் கின்றனர்.

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் மீனவர்கள், கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேயிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்க மங்கலத்தை சேர்ந்த ஆல்பிரட் நியூட் டன்(35), எஸ்கலின் (29), வினிஸ்டன், பெரியகாட்டைச் சேர்ந்த விவேக், மணக் குடியை சேர்ந்த சாஜன், குளச்சலைச் சேர்ந்த ஜெகன், திருநெல்வேலி மாவட் டம் உவரியைச் சேர்ந்த சகாய ரவிக் குமார் மற்றும் கேரள மீனவர்கள் இருவர் என 9 பேர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏமன் நாட்டில் சுல்தான் என்பவரிடம் மீன்பிடி வேலைக்குச் சேர்ந்தனர்.

தினமும் மீன்பிடி பணியில் ஈடுபடுத் தப்பட்ட அவர்களுக்கு, மீன்பிடி பங்கு ஊதியத்தை வழங்காததால் உணவுகூட கிடைக்காமல் சிரமம் அடைந்துள்ளனர். குடும்பத்தாருக்கு ஒருமுறை கூட பணம் அனுப்ப முடியாமல் தவித்துள்ளனர்.

இதனால், எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டும் என முடிவெடுத்து, கடந்த 19-ம் தேதி அரேபிய முதலாளியின் விசைப்படகில் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளனர். கடந்த 9 நாட்களாக இவர்கள் தொடர்பில் இல்லாதது, குடும்பத்தார் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் குடும்பத்தாரை தொடர்புகொண்ட மீனவர்கள், `‘இந்திய கடல் எல்லைக்குள் வந்து விட்டோம். டீசல் பற்றாக்குறையால் லட்சத்தீவு கடல் பகுதியில் தவிக்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘`டீசல் கிடைத்தால் 2 நாட்களில் கொச்சி அல்லது குளச்சல் துறைமுகத்துக்கு வந்து விடலாம். பல நாட்களாக உணவு, தண்ணீரின்றி அவதியடைகிறோம். எங்களை கரைசேர்க்க உதவுங்கள்’’ என கூறியுள்ளனர். அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x