

மத்திய தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச பாஜக அரசு தயங்குகிறது என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் முன் னேற்ற சங்கப் பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய தொழிற்சங்கங்களின் 12 அம்சக் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களை அழைத் துப் பேசவதற்காக மத்திய அமைச் சர்கள் குழு அமைக்கப்பட்டது. அக் குழுவில் மத்திய நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், 2015-க்குப் பிறகு மத்திய தொழிற்சங்கங்களின் 12 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட இக்குழு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச முன்வரவில்லை.
மேலும், ஆண்டுதோறும் மத் திய அரசால் நடத்தப்பட வேண்டிய தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘இந்திய தொழிலாளர் மாநாடு' கடைசியாக 2015-ம் ஆண்டு ஜூலை 20, 21 தேதி களில் நடைபெற்றது. அதன்பிறகு இந்த முக்கியமான மாநாட்டை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
கடந்த செப்.30-ம் தேதி டெல்லி நாடாளுமன்ற வீதியில், மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற 10 தொழிற் சங்கங்கள் ஆர்பாட்டம் நடத்தின. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ல் நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத் தம் நடைபெறும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள் ளன. இப்போராட்டத்தை நடத்த, தேசிய, மாநில, மாவட்ட மற்றும் துறைவாரியாக கருத்தரங்குகள், ஆலை வாயிற்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வேலைநிறுத் தம் குறித்து மத்திய சங்கங் களுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மாநிலங் களவையில் கேள்வி எழுப்பிய போது, மத்திய தொழி லாளர் நலத் துறை அமைச்சர் முன்னுக்குப் பின் முரணாக தனக்கு வேலைநிறுத்த அறிவிப்பு வரவில்லை என்று தவறான பதிலை அளித்துள்ளார்.
மேலும், மத்திய தொழிலாளர் நல ஆணையர் இதுகுறித்து பேசுவார் என்று தெரிவித்துள்ளார். இச்செயல் 50 கோடி தொழிலாளர் களின் பிரதிநிதிகளை அவமதிப்ப தாகும். உடனடியாக மத்திய அமைச்சர்கள் குழு தொழிற் சங்கங் களை அழைத்துப் பேச வேண்டும். இவ்வாறு அறிக்கையில் சண் முகம் வலியுறுத்தியுள்ளார்.