Published : 28 Nov 2019 07:43 PM
Last Updated : 28 Nov 2019 07:43 PM

உத்தமபாளையம் பகுதியில் மரத்தில் அறையப்பட்ட ஆணிகளை அகற்றிய தன்னார்வலர்கள்: 20 மரங்களில் இருந்து 7 கிலோ ஆணி நீக்கம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் மரத்தில் அறையப்பட்ட ஆணிகளை தன்னார்வலர்கள் திரண்டு வந்து அகற்றினர். பின்பு மஞ்சள் வைத்து புனரமைத்தனர்.

புறவழிச்சாலையில் தொடங்கிய நிகழ்ச்சியை காவல் சார்பு ஆய்வாளர் ஜெயப்பாண்டி ஆரம்பித்து வைத்தார். மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செந்தாமரை முன்னிலை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ்பாபு, பாலசுப்பிரமணியன், பசுமைசெந்தில் ஆகியோர் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

புறவழிச்சாலை முதல் நீதிமன்றம் வரை இப்பணி நடைபெற்றது. 20 மரங்களில் இருந்து 7 கிலோ ஆணி அகற்றப்பட்டது.

சோலைக்குள்கூடல், முல்லைநில நண்பர்கள், தேனீக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி, கல்லூரி மற்றும் பூச்சிமருந்து நிறுவனங்களே விளம்பரத்திற்காக மரங்களில் அதிகளவில் ஆணி அடித்திருந்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மரங்களே இது போன்று அதிகம் காயப்படுத்தப்பட்டிருந்தது.

ஆணி அகற்றிய இடத்தில் மஞ்சள், வேப்பஎண்ணெய் கலந்து பூசினர்.

இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், தேனியில் தொடங்கி ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். ஒரே மரத்தில் 5 கிலோ ஆணிகள் கூட அறையப்பட்டுள்ளது.

இதனால் மரத்தின் வளர்ச்சிப் பாதிக்கப்படுவதுடன், அதன் ஆயுளும் குறையும். எனவே இது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x