Published : 28 Nov 2019 01:41 PM
Last Updated : 28 Nov 2019 01:41 PM

விதிமுறைகளை மீறி இயக்கப்படும் கேஜ்வீல் பொருத்தப்பட்ட உழவு டிராக்டர்களால் சாலை சேதம்: விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

வயல்களில் உழவுப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் கேஜ்வீல் டிராக்டர்களை, தார் சாலைகளில் விதிமுறைகளை மீறி அதிக தூரம் ஓட்டிச் செல்வதால் அவை சேதமடை வதாகப் புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளிலும், குளம், கண்மாய் உள்ளிட்ட நீராதாரங்களிலும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உழவு, நடவு செய்வது போன்ற வேளாண் பணிகள் மும்முரமடைந்துள்ளன.

உழவைப் பொருத்தளவில் மாடுகள், ஏர் கலப்பை போன்றவற்றைப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. தற்போது பரவலாக டிராக்டர் மூலமே உழவு நடைபெறுகிறது. இதற்காக டிராக்டர் டயர்களை கழற்றிவிட்டு கேஜ் வீல்களை பொருத்தி வயல்களை உழுகின்றனர். அதிக அழுத்தத்தில், இழுவைத் திறனும் கூடுதலாக இருப்பதால் டிராக்டர் உழவு பரவலாக விரும்பப் படுகிறது. இதனால் கேஜ்வீல் உழவுக்கு உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி, குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கேஜ்வீல் பொருத்திய டிராக்டர்களை வயல்களிலே உழ வேண்டும். இவற்றை தார்ச் சாலையில் இயக்கக் கூடாது என்று நெடுஞ்சாலைத் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆனால், பலரும் வயல்களில் இருந்து அருகில் உள்ள ஊர்களுக்
கான வயல்களுக்குச் செல்ல கேஜ்வீலுடனேயே தார் சாலையில் செல்கின்றனர்.

இதனால் சாலையில் அழுத்தமான கோடுகளும், பள்ளங்களும் ஏற்பட்டு அதன் ஆயுள்தன்மை குறைகிறது. இந்த பள்ளங்களில் நீர் தேங்கி சாலையை அாித்து பொிய அளவில் சேதமடையச் செய்கிறது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆனால், பலரும் இதனைப் பின்பற்றுவதில்லை.

ஒவ்வொரு வயலுக்கும் இடம் மாறும்போது டயரை கழற்றி மாற்றுவதால் நேரமாகும் என்பதால், அப்படியே தார்ச் சாலையில் இயக்கிச் செல்கின்றனர் என்றனர்.

- என். கணேஷ்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x