

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இன்றுடன் 100 நாட்களாகின்றன.
வழக்கு கடந்து வந்த பாதை
ஆக.20: முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை வழக்குப் பதிவு செய்தன. இதனால் முன் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முயற்சி மேற்கொண்டது.
ஆக.22: சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் ஆகஸ்ட் 22-ம் தேதி இரவு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தி யாளர்களை சந்தித்த அவர், "நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. வழக்கறிஞர்களுடன் ஆலோசனை யில் ஈடுபட்டிருந்தேன்" என்றார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்த தும் தனது இல்லத்துக்கு திரும்பிய ப.சிதம்பரத்தை சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அன்றைய தினம் இரவு கைது செய்தனர்.
செப். 5: டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட ப.சிதம் பரம், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் அடைக் கப்பட்டார். அதன்பிறகு இரு வாரங் களுக்கு ஒருமுறை அவரது நீதி மன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது.
அக். 22: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 22-ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், இதே விவகாரத்தில் அமலாக்கத் துறையும் கைது செய்திருப்பதால் அவரின் திஹார் சிறை வாசம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நவம்பர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
ஆகஸ்ட் 21-ம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இன்றோடு 100 நாள்கள் ஆகிறது. இதில் 15 நாள்கள் அவர் சிபிஐ காவலில் இருந்தார். செப்டம்பர் 5-ம் தேதி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட அவர், 85 நாள்களாக சிறையில் இருந்து வருகிறார்.
சிறையில் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளால் அவதிப்பட்ட அவர் இருமுறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிறைக்கே திரும்பினார்.
அவருக்கு வீட்டு உணவு, குடும்ப மருத்துவர் சிகிச்சை, குடும்பத்தி னருடன் தொலைபேசியில் பேசுதல் உள்ளிட்ட வசதிகளை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறையில் இருந்தாலும் குடும் பத்தினர் மூலம் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய பாஜக அரசை விமர்சித்து கடுமையான கருத்து களை ப.சிதம்பரம் தெரிவித்து வருகிறார்.
நவ.27: திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் சந்தித்துப் பேசினர்.
100 நாட்கள்: கைது செய்யப் பட்டு 100 நாள்களை கடக்கும் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 11 வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அவரது ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப் பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று திஹார் சிறையில் இருந்தவாறே சிதம்பரம் ட்விட்டரில் கருத்துகளைப் பகிர்ந் துள்ளார். அதில் அவர் கூறியிருப் பதாவது: அதிகாலை 4 மணிக்கு குடியரசுத் தலைவர் அலுவல கத்தை எழுப்பி, மகாராஷ்டிராவில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி கையொப்பமிடக் கூறி நீக்கப்பட்டுள்ளது. இது குடியரசுத் தலைவர் அலுவலகத் தின் மீதான தாக்குதல். காலை 9 மணி வரை உங்களால் ஏன் காத்திருக்க முடியாதா?" என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பில்லாவா? ரங்காவா?
ப.சிதம்பரத்துக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும்போது, " ப.சிதம்பரம் என்ன பில்லாவா? ரங்காவா?
வேண்டுமென்றே அரசியல் ரீதி யாக ப.சிதம்பரம் பழி வாங்கப் படுகிறார். அமலாக்கத்துறை வேண்டுமென்றே அவருக்கு ஜாமீன் தர மறுக்கிறது. ப.சிதம்பரம் என்ன ரங்கா - பில்லா போன்ற கடத்தல்காரரா? அவர் ஜாமீனில் வெளியே வந்தால் ஆதாரத்தை அழிப்பாரா? அவரை இப்படி நடத்துவதை ஏற்க முடியாது. ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என்று வாதிட்டார்.
- பிடிஐ