Published : 23 Aug 2015 10:08 AM
Last Updated : 23 Aug 2015 10:08 AM

விருகம்பாக்கம், கிண்டி உட்பட 10 இடங்களில் நவீன ஆவின் பாலகங்கள்

வாகன நிறுத்தம், இலவச வை-ஃபை வசதிகள் கொண்ட நவீன ஆவின் பாலகங்கள் விருகம் பாக்கம், பெசன்ட்நகர், திருவான் மியூர், அசோக்பில்லர், வேளச்சேரி உள்ளிட்ட 10 பகுதிகளில் அமைக்கப் பட்டு வருவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை நந்தனம் ஆவின் வளாகத்தில் ரூ.31.29 கோடியில் நுகர்வோர் நல மையம் உள்ளிட்ட அலுவலக கட்டிடத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 15-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

இக்கட்டிட பணிகளை அமைச்சர் பி.வி.ரமணா ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, விருகம் பாக்கத்தில் 24 ஆயிரம் சதுரடி பரப்பில் 2000 சதுரடியில் ரூ.1.60 கோடியில் கட்டப்படும் ஆவின் டிரைவ்- இன்-பாலகத்தின் இறுதிக் கட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். இப்பாலகம் குளிர்பதன வசதியுடன் நுகர்வோர் அமர்ந்து சாப்பிடும் வகையிலும், குழந்தை களுக்கான விளையாட்டு உபகர ணங்களுடன் சிறுவர் பூங்கா, நடைப்பயிற்சி செய்பவர்களுக் கான நடைபாதையுடன் அமைக்கப் பட்டுள்ளது.

ஆவின் ஐஸ்கிரீம்கள், ஆவின் பால் பொருட்கள், பீட்சா, பர்கர், சான்ட்விச், பிரஞ்ச் பிரை ஆகியவை இதில் கிடைக்கும். இந்த பாலகத்தில் 50 கார்கள் மற்றும் 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும், வை-ஃபை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளையும் விரைவாக முடிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் இது போன்ற நவீன பாலகங்கள், பெசன்ட்நகர், திருவான்மியூர், வண்ணாந்துறை, அசோக்பில்லர், வேப்பேரி, கிண்டி, வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை எஸ் ஐஇடி ஆகிய இடங்களில் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x