லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் போலீஸ் காவலில் முருகனிடம் 7 நாட்கள் விசாரிக்க அனுமதி

திருச்சி ஜே.எம்-2 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திவிட்டு முருகனை அழைத்து வரும் போலீஸார். படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி ஜே.எம்-2 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திவிட்டு முருகனை அழைத்து வரும் போலீஸார். படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் முருகனிடம் 7 நாட்கள் காவலில் விசாரிக்க கோட்டை குற்றப்பிரிவு போலீஸா ருக்கு அனுமதி அளித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக். 2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை தொடர்பாக பிரபல கொள்ளையன் முருகனை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் முருகன் பெங்க ளூரூ நீதிமன்றத்தில் சரணடைந் தார். அதைத் தொடர்ந்து முரு கனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீஸார் முயற்சி மேற் கொண்டனர். ஆனால் கர்நாடகா வில் அவர் மீதுள்ள வழக்குகள் காரணமாக அம்மாநில போலீ ஸார் அவரை தொடர்ந்து காவலில் எடுத்து வந்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிவுற்றதால் முருகன் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, முருகனிடம் 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி ஜே.எம்-2 நீதிமன்றத்தில் கோட்டை குற்றப்பிரிவு போலீ ஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்காக முருகன் நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

போலீஸ் தரப்பில் விடுக் கப்பட்ட வேண்டுகோளை ஏற்று நீதிபதி திரிவேணி, முருகனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கோசல்ராம் தலைமையிலான போலீஸார் முருகனை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

முருகன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, அவரது மனைவி மஞ்சுளாவுடன், முருகனால் தத்தெடுக்கப்பட்ட ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் அங்கு வந்திருந்தனர். அவர் களைக் கண்டதும் முருகன் கதறி அழுதார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in