

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்எல்சி) தொழிலாளர் களுக்கு 2012 ஜனவரி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும். ஒப்பந்தம் போடா ததால் தொழிற்சங்கத்தினர் கடந்த மாதம் 20-ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சென்னையிலும் அதைத் தொடர்ந்து டெல்லியி லும் 4 கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப் படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. வேலை நிறுத்தமும் நீடிக்கிறது.
இந்நிலையில், சென்னையில் நேற்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. துணை தலைமை தொழிலாளர் ஆணையர் வத்ஸா முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் என்எல்சி அண்ணா தொழிற்சங்க தலைவர் அபு, செயலாளர் ராம உதயகுமார், பொருளாளர் மோகனசுந்தரம், தொமுச தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் சா.ராசவன்னி யன், பொருளாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளை பேச்சு
மதியம் 12 மணிக்கு தொடங் கிய பேச்சுவார்த்தை பிற்பகல் 3 மணி வரை நீடித்தது. பேச்சுவார்த்தையில் என்எல்சி நிர்வாகம் சார்பில் யாரும் பங்கேற்காததால் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதைய டுத்து, மீண்டும் நாளை (5-ம் தேதி) பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இத்தகவலை தொழிற்சங்க பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.