

காலில் பொருத்தப்பட்டிருந்த கம்பி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் வீடு திரும்பினார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் வலது கால் எலும்பு கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் முறிந்தது.
காலில் இருந்த கம்பி அகற்றம்
இதனால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப் பட்டது. அந்த கம்பியை அகற்று வதற்காக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவ மனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். கடந்த 22-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கம்பி அகற்றப்பட்டது. டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் ஓய்வில் இருந்த கமல்ஹாசன், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.