

‘முரசொலி’ நிலம் தொடர்பான விவகாரத்தில் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு திமுக அனுப்பிய அவதூறு நோட்டீஸுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாமக நிறு வனர் ராமதாஸ் சார்பில் வழக்கறி ஞர் கே.பாலு திமுக தரப்புக்கு அனுப்பியுள்ள பதில் நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
சென்னையில் ‘முரசொலி’ அறக் கட்டளை உள்ள இடம் பஞ்சமி நிலம் என்பதால் அதை மீட்டுத்தரக் கோரி பல்வேறு அமைப்பினர், கட்சியினர் போராட்டம் நடத்தி யுள்ளனர். கடந்த 2005-ல் ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற தலித் அமைப் பினரும், 2010-ல் அதிமுகவினரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
2010-ல் ஆட்சியில் இருந்த திமுக, போராட்டம் நடத்திய அதிமுகவினருக்கு எதிராக எந்த புகாரும் அளிக்கவில்லை. தலித் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே பாமக நிறுவனர் ராமதாஸ், ‘அசுரன் படம் தந்த பாடம் மூலமாக முரசொலி அறக்கட்டளை உள்ள பஞ்சமி நிலத்தை தலித் மக்களிடம் மு.க.ஸ்டாலின் மீண் டும் ஒப்படைப்பார்’ என நம்புவதாக தெரிவித்து இருந்தார். பதிலுக்கு மு.க.ஸ்டாலின் பட்டாவை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
ஆனால் அந்த இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதற்கான சொத்துப் பத்திரங்களையும், அதற் கான மூலப்பத்திரங்களையும் திமுக இதுவரை வெளியிட வில்லை. மாறாக இந்தப் பிரச் சினையை திசை திருப்பும் வகை யில், ராமதாஸ் ஆயிரக்கணக்கான நிலங்களை அபகரித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் அவதூறு பரப்பி வருகிறார்.
அந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்றால் அதற்கான சொத்து பத்திரங்களை வெளியிட வேண்டும். இல்லையெனில் அந்த நிலத்தை மீண்டும் தலித் மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதுதான் ராமதாஸ் விடுத்த ட்விட்டர் பதிவு. இதில் எந்த அவதூறும் இல்லை. ஆனால் உண்மைக்குப் புறம்பான, அடிப் படை ஆதாரமற்ற அவதூறான குற்றச்சாட்டுகளை பாமகவுக்கு எதிராக திமுக அரசியல் உள்நோக்கத்துடன் கூறியுள்ளது.
எனவே ராமதாஸூக்கு, திமுக அமைப்புச் செயலாளர் அனுப்பி யுள்ள அவதூறு நோட்டீஸை உட னடியாக வாபஸ் பெற்றுக் கொண்டு, நிபந்தனையற்ற மன் னிப்பு கோர வேண்டும். இல்லை யெனில் அவர் மீது தொடரப்படும் குற்றவியல் மற்றும் உரிமையியல் ரீதியான சட்டப்பூர்வ நடவடிக்கை களுக்கு அவரே பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.