

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் இந்தியாவின் மிகப் பெரிய வெங்காய சந்தை உள்ளது. அங்கிருந்துதான் நாடு முழுவதற் கும் வெங்காயம் அனுப்பப்படு கிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால், வெங்காய பயிர்கள் பாதிக்கப்பட்டன. கியார், மஹா ஆகிய இரு புயல்களால் வெங்காய உற்பத்தி குறைந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்புவது பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுதொடர் பாக கோயம்பேடு வெங்காய வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.ஜான் வல்தாரிஸ் கூறும்போது, "கோயம்பேடு சந்தைக்கு வழக்க மாக தினமும் 65 லோடுகள் வரை வெங்காயம் வரும். தற்போது 40 லோடுகள் மட்டுமே வருகின்றன. அதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நில வரப்படி, தரத்துக்கு ஏற்றவாறு மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் 100 வரை விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் ரூ.80 முதல் 140 வரை விற்கப்பட்டது" என்றார்.
திருவல்லிக்கேணி ஜாம்பஜார் சில்லறை காய்கறி வியாபாரி முகமது அலி கூறும்போது, "இங்கு பெரிய வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரையும், சின்ன வெங்காயம் ரூ.100 முதல் 160 வரையும் விற்கப்படுகிறது. இத னால் பொதுமக்கள் வெங்காயம் வாங்கும் அளவு குறைந்துள்ளது" என்றார்.
இதுகுறித்து சென்னை ஹோட் டல் உரிமையாளர் சங்கத் தலைவர் எம்.ரவி கூறும்போது, “வெங்காய விலை உயர்ந்தாலும், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்து வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். வெங்காய பச்சடி யின் அளவை குறைப்பது, வெங் காயத்துக்கு மாற்றாக கேரட், வெள் ளரிக்காய் பச்சடிகளை வழங்குவது என நிலைமையை சமாளித்து வரு கிறோம். ஆன்லைனில் வெங்கா யத்தை இருப்பு வைப்பதுதான் விலை உயர்வுக்கு காரணம்" என்றார்.