வாகன பழுது, போதிய கருவிகள் இல்லை என புகார்: 108 ஆம்புலன்ஸ்களை ஆய்வு செய்ய குழு

வாகன பழுது, போதிய கருவிகள் இல்லை என புகார்: 108 ஆம்புலன்ஸ்களை ஆய்வு செய்ய குழு

Published on

வாகனங்கள் சேதமடைந்தும், போதுமான உயிர்காக்கும் மருத் துவக் கருவிகள் இல்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜிவிகே - இஎம்ஆர்ஐ நிறுவனத் துடன் இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு செயல் படுத்தி வருகிறது. தமிழகம் முழு வதும் மொத்தம் 931 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்ற னர். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 14 இருசக்கர வாக னங்கள் உட்பட 96 வாகனங்கள் உள் ளன. இந்நிலையில், பல ஆம்பு லன்ஸ் வாகனங்கள் பழுதாகி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் இல்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, அனைத்து ஆம் புலன்ஸ் வாகனங்களிலும், பச்சிளம் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் சாதனங்கள், அவசர கால மருத்துவ சாதனங்கள், உயர் மருத் துவ உபகரணங்கள் உள்ளிட் டவை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கு மாறு தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் நாகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அவர் பிறப்பித்துள்ள உத்தர வில், “குழந்தைகள் நல டாக்டர், தாய்-சேய் அவசர சிகிச்சை திட்டத் தின் துணை கண்காணிப்பாளர் அல்லது மயக்கவியல் நிபுணர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவினர் ஆம்புலன்ஸ் வாக னங்களை ஆய்வு செய்து அறிக் கையை அனுப்ப வேண்டும். இந்த ஆய்வுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மாவட்ட மேலாளர் கள் ஒத்துழைப்பு அளிக்க வேண் டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in