சுற்றுச்சூழல் மாசால் தீவிரமடையும் நுரையீரல் அடைப்பு நோய்: நெல்லையில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் நெஞ்சக நோய் பிரிவு மருத்துவர் தகவல்

டாக்டர் இ. மதன்
டாக்டர் இ. மதன்
Updated on
1 min read

உலகின் 3-வது பெரிய ஆள் கொல்லி நோயாக, நாள்பட்ட நுரை யீரல் அடைப்பு நோய் உரு வெடுத்துள்ளதாக திருநெல்வேலி யில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தின விழிப்புணர்வு கருத் தரங்கம் நடைபெற்றது. இதை அரசு மருத்துவமனை கண்காணிப் பாளர் டாக்டர் சி.பாலசுப்பிரமணி யன் தொடங்கி வைத்தார். நெஞ்சக நோய் பிரிவு மருத்துவத் துறை தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். டாக்டர் மார்த்தாண்டம் வாழ்த்துரை வழங்கினார். நாள் பட்ட நுரையீரல் அடைப்பு நோய் தொடர்பாக நெஞ்சக நோய் பிரிவு டாக்டர் இ.மதன் பேசியதாவது:

உலக அளவில் ஆள்கொல்லி நோய்களாக கருதப்படும் மார டைப்பு, நிமோனியாவுக்கு அடுத்த படியாக 3-வது பெரிய ஆள் கொல்லி நோயாக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருக்கிறது. உலகம் முழுவதும் 3 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் அதிகரிக்கிறது.

புகைபிடித்தலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் முக்கிய காரணங்கள். மாரடைப்பு, அதிக ரத்த அழுத் தம் போன்றவை குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது. ஆனால் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குறித்த விழிப் புணர்வு ஏற்படவில்லை.

மருத்துவ பரிசோதனை

நாள்பட்ட இருமல், சளி, இளைப்பு இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால், ஆஸ்துமா நோய் வேறு, இந்நோய் வேறு. மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வாழ்நாள் முழுக்க கட்டுப்படுத்த மருத்துவ வசதிகள் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் நுரையீரல் செயல் திறன் பரிசோதனை செய்யப்பட்டு, இலவசமாகவே இன்ஹேலர் எனப்படும் உறிஞ்சும் மருந்து அளிக்கிறோம்.

10 ஆண்டுகளுக்குமேல் புகை பிடிப்பவர்களுக்கு நிச்சயம் இந் நோய் பாதிப்பு இருக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களே இந் நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார் கள். குளிர்காலத்திலும், பனிக் காலங்களிலும் இந்நோய் பாதிப்பு அதிகமிருக்கும்.

தற்போது, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனையிலும் அதிக எண்ணிக் கையில் இந்நோய் பாதித்தவர்கள் வருகிறார்கள். புகைபிடித்தலை தவிர்ப்பது, சுத்தமான காற்றை சுவாசிக்கும் வழிவகைகளை செய் வதே இந்நோய் வராமல் தடுக்கும் வழிகளாகும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in