

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 500 பவுன் நகைகளுக்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை, வழிப்பறி, திருட்டு என தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப் பாக காரைக்குடியில் கொள்ளைச் சம்ப வங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகி ன்றன.
காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா காதிநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அஞ்சல்துறை அதிகாரி கடந்த மாதம் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு 143 பவுன் கொள்ளை அடிக்கப் பட்டன. காரைக்குடி மகரநோன்பு பொட்டலைச் சேர்ந்த ஜவுளிக் கடை அதிபர் இளங்கோ மணி சில வாரங்களுக்கு முன்பு அவரது வீட்டில் 250 பவுன் , ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டன.
அதே தினத்தில் சுப்பிரமணி யபுரம் தெற்கு விஸ்தரிப்பு பகுதியில் வீட்டில் இருந்த விஜயா என்பவரிடம் மர்மநபர் 17 பவுன் நகைகளை பறித்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு பெண்ணிடமிருந்தும் 4 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பினார். சென்ற வாரம் என்ஜிஓ இபி காலனியைச் சேர்ந்த வய தான தம்பதியிடம் பத்தரை பவுன் சங்கிலியை மர்மநபர் ஒருவர் வயர் மேன் எனக் கூறி பறித்தார். கடந்த 2 மாதங்களில் மட்டும் 500 பவுன் நகைகளுக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால், இதுவரை ஒரு வழக்கில் கூட குற்ற வாளிகளை பிடிக்க முடியவில்லை. கொள்ளைச் சம்பவங்களும் தொடர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த காலங்களில், குற்றப் பிரிவுகளில் அனுபவம் வாய்ந்த போலீஸாரை நியமித்தனர். தற்போது அந்த நிலை மாறி விட்டது. அரசியல் தலைவர்கள் வருகை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கோயில் விழா க்கள் என மாற்றுப் பணிகள் வழங்கப் படுகின்றன.
இதனால் குற்றவாளிகள் குறித்த தகவல் களை சேகரிக்க முடியாமல் போய்விடுகிறது. கடைகள், நிறுவனங்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் கூட கேமராக்களை வைப்பதில்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘சில வழக்குகளில் குற்ற வாளிகளை நெருங்கி விட்டோம்,’ என்றனர்.
- இ.ஜெகநாதன்