Published : 27 Nov 2019 10:35 AM
Last Updated : 27 Nov 2019 10:35 AM

பாலாற்றங்கரையோர கிராமங்களில் 25 ஆண்டுக்கு பிறகு குழாயில் குடிநீர் விநியோகம்

வாயலூர் மற்றும் வல்லிபுரம் பகுதிகளில் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், 25 ஆண்டுகளுக்கு பிறகு குழாய் களில் பாலாற்று குடிநீர் வழங்கப்படுவதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாயலூர், வல்லிபுரம் பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப் பட்டுள்ளன. இந்த 2 தடுப்பணை களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இரு கரையோரங்களிலும் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங் களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந் துள்ளது.

மேலும், பல ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றுப்படுகையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் உவர்ப்பு தன்மை குறைந்துள்ளது. கிராமங்களில் உள்ள குடிநீர் கிணறுகளில் மீண்டும் நீர்சுரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர கிராமப் பகுதி வீடுகளுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கரையோர கிராம மக்கள் கூறும்போது, “நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் இப்பகுதி குடிநீர் கிணறுகள் வறண்டன. மேலும், ஆற்றுப்படுகையில் கடல்நீர் புகுந்ததால் உவர்ப்பு தன்மை ஏற்பட்டு குடிநீர் கிணறுகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நாங்கள் குடிநீருக்காக பல்வேறு துன்பங்களை சந்தித்து வந்தோம். விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தடுப்பணையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பயனற்று இருந்த குடிநீர் கிணறுகளில் மீண்டும் நீர்சுரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 25 ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. மேலும், குழாயில் வரும் தண்ணீர் மிகவும் தூய்மை யாகவும், சுவையாகவும் உள்ளது” என்றனர்.

இதுகுறித்து, வாயலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிங் உசேன் கூறும்போது, “வாயலூர் உட்பட கரையோர கிராமங்களில் உள்ள குடிநீர் கிணறுகளில் நீர்சுரப்பு ஏற்பட்டுள்ளதால், குழாய் கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார் கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள குழாய்கள், பராமரிப்பின்றி சேத மடைந்த நிலையில் உள்ளன. அதனால், அவற்றை சீரமைக்கவும் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு களை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், கரை யோர கிராமங்கள் மட்டுமின்றி அதனருகே உள்ள கிராமங்களி லும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்” என்றார்.

திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், “பாலாறு மற்றும் அதன் கரையோரத்தில் நீர்சுரப்பு இல்லாமல் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடிநீர் கிணறுகளை சீரமைக்க, திட்ட மதிப்பீடு தயாரித்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x