தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டையில் இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி: பல கோடி ரொக்கம், நகைகள் தப்பின

கொள்ளையர்களால் காஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்ட ஜன்னலின் இரும்பு கிரில் தடுப்பு.
கொள்ளையர்களால் காஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்ட ஜன்னலின் இரும்பு கிரில் தடுப்பு.
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே அம்மன் பேட்டையில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் சிசிடிவி கேமரா, அலாரம் ஆகியவற்றின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டையில் இந்தியன் வங்கிக் கிளை உள்ளது.

மிளகாய்பொடி தூவினர்

நேற்று காலை வங்கியின் காசாளர் ரவி வங்கியைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜன்னல் இரும்பு கிரில் தடுப்பு உடைக்கப்பட்டு இருந்ததையும், வங்கியின் உள்ளே மிளகாய்ப் பொடி தூவி இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, வங்கி மேலாளர் வசந்த குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

சிசிடிவி இணைப்பு துண்டிப்பு

அவர் அளித்த தகவலின்பேரில் நடுக்காவேரி போலீஸார் மற்றும் திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளர் பெரியண்ணன் ஆகியோர் வங்கிக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் டோபி வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அது வங்கிக்கு அருகில் உள்ள காளியம்மன் கோயில் வரை சென்றுவிட்டு திரும்பிவிட்டது.

இதைத் தொடர்ந்து போலீஸார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். வங்கியின் பக்கவாட்டுச் சுவரில் ஏறிக் குதித்த மர்ம நபர்கள், வங்கியில் இருந்த 6 சிசிடிவி கேமராக்களில் மூன்றின் இணைப்பு களையும், எச்சரிக்கை அலாரத் தின் இணைப்பையும் துண்டித்து விட்டு வங்கியின் அனைத்து மேஜை டிராயர்களையும் திறந்து பார்த் துள்ளனர்.

அவற்றில் பணம் எதுவும் இல்லாததால், லாக்கரின் கதவை கம்பியால் திறக்க முயற் சித்துள்ளனர். ஆனால், திறக்க முடியாததால் கொள்ளை முயற் சியைக் கைவிட்டுவிட்டு தப்பி யோடிவிட்டனர். இணைப்புகள் துண்டிக்கப்படாத 3 சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். வங்கியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் தப்பியதால் வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in