முதியோர் உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு 

முதியோர் உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு 
Updated on
1 min read

சமூகநலத் துறை நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

முதியோர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் ‘1253’ என்ற எண்ணும், பிற மாவட்டங்களுக்கு 1800-180-1253 என்ற எண்ணும், பொது சேவை எண்ணாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தமிழகத்தில் முதியோர்கள் பயனடையும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்ற ஆணைபடி மூத்த குடிமக்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து உதவிகளைப் பெற கூடுதலாக 044-24350375, 9361272792 என்ற எண்கள் அறிவிக்கப்படுகின்றன. முதியோர்கள் தங்கள் குறை களை கூற மேற்கண்ட உதவி எண்களை தொடர்பு கொள்ள லாம் என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in