

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி இந்து கோயில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராம் திருமாவளவனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து, கடலூர் மாவட்ட எஸ்.பி. அபிநவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலா ளர் தாமரைச் செல்வன் கடந்த வாரம் புகார் ஒன்றை அளித்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் காயத்ரி ரகுராம் மீது, அவதூறு பரப்பும் வித மாக பேசியது, பிரிவினைவா தத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி யது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக் குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காயத்ரி ரகுராம் புகார் மனு
இதற்கிடையே, சென்னை காவல் ஆணையர் அலுவலகத் துக்கு நேற்று நேரில் வந்த நடிகை காயத்ரி ரகுராம், காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
இதுகுறித்து போலீஸாக் கூறும் போது, "சமூக வலைதளங்கள், தொலைபேசி அழைப்புகள் மூலம் மர்ம நபர்கள் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
மேலும் தனது வீட்டுக்கு வெளியி லும் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளது. எனவே, தனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என கோரியுள்ளார். இதுகுறித்து விசாரிக்கப்படுகிறது" என்றனர்.