

பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, வரும் 30-ம் தேதி சென்னை வருகிறார். திருவள்ளூ ரில் நடக்கும் நிகழ்ச்சியில் 15 மாவட்ட பாஜக அலுவலகங்களுக்கு அடிக் கல் நாட்டுகிறார்.
தமிழகத்தில் பாஜக, கட்சி ரீதியாக 60 மாவட்டங்களில் செயல் பட்டு வருகிறது. அனைத்து மாவட் டங்களிலும் கட்சிக்கு சொந்த இடத்தில் அலுவலகம் கட்ட வேண் டும் என்று கடந்த 2014-ல் தேசிய தலைவராக பொறுப்பேற்றதும் அமித் ஷா முயற்சி மேற்கொண்டார். இதற்காக மாநில அளவில் குழுக் கள் அமைக்கப்பட்டு மாவட்ட அலுவலகங்கள் கட்ட சொந்த இடம் வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, பெரும்பாலான மாவட்டங்களுக்கு சொந்தமாக இடங்கள் வாங்கப்பட்டன. அதில் 15 மாவட்டங்களில் பத்திரப்பதிவு முடிந்து அலுவலகம் கட்ட தயார் நிலையில் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திலும் பாஜக அலுவலகம் கட்ட இடம் தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, நவ. 30-ம் தேதி சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் அவர், அங்கு திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்ட பாஜக அலுவலகங்கள் கட்ட அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழா முடிந்ததும் திருவள்ளூரில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் குறித்து..
தற்போது தமிழகம் முழுவதும் பாஜக உள்கட்சி தேர்தல் நடக்கிறது. கிளை கமிட்டி, மண்டல் தலைவர் தேர்தல்கள் முடிந்து மாவட்டத் தலைவர்கள் தேர்தல் நடந்து வருகிறது. டிசம்பர் 2-வது வாரத்தில் மாநிலத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாகவும் அதிமுக கூட்டணி, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மாநில நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்த இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.