தூண்டுதலின்பேரில் நீதிமன்றத்தில் வழக்கு: உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக விரும்பவில்லை - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு
காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுகவுக்கு விருப்பம் இல்லை. அதிமுகவின் தூண்டுதலின்பேரி லேயே செ.கு.தமிழரசன் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அகில இந்தியச் செயலாளர்கள் சஞ்சய் தத், வல்ல பிரசாத், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டி யிட இருப்பவர்களின் விவரங்கள் குறித்தும் மாவட்ட தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

மகாராஷ்டிரா விவகாரத்தில் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் ஜனநாயகத்தை பாதுகாக்க தவறிய நிலையில் உச்ச நீதிமன்றம் அதன் கடமையைச் செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக தள்ளிக்கொண்டே சென்றது. நீதி மன்ற தீர்ப்புகள் காரணமாக உள் ளாட்சித் தேர்தலை நடத்துவது போல அதிமுக அரசு காட்டிக் கொள்கிறது.

ஆனால், உண்மையிலேயே தேர்தலை நடத்த அதிமுகவுக்கு விருப்பம் இல்லை. அதனால் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரச் செய்துள்ளனர். அதிமுகவின் தூண்டுதலின்பேரிலேயே அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்த வேண்டும்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பணி தொடர வேண்டும். அவருக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் அதிமுக அவருக்கு எதிராக இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக வெங்காயத்தை இறக்குமதி செய்து விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அழகிரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in