

மழைநீர் வடிகால் கால்வாயில் சாக்கடை நீரையோ, செப்டிக் டேங்க் கழிவையோ கலந்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதித் திட்டத்தின்கீழ் குப்பை எடுத்துச் செல்லப் பயன்படும் பேட்டரியில் இயங்கும் 3 சக்கர வாகனங்களை மாநகராட்சிக்கு வழங்கும் விழா சென்னை மாநகராட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், வாகனப் பயன்பாட்டை தொடங்கி வைத்த சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிர காஷ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் தினமும் சேகரிக் கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை கள், மக்காத குப்பைகள் என பிரிக் கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகிறது. குப்பையில் இருந்து உரமும் சாண எரிவாயும் தயாரிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் குப்பை சேகரிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
வெயிலிலும் மழையிலும் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் பணியாளர்களின் வசதிக்காக மின்சாரத்தில் இயங்கும் 500 ரிக் ஷாக்கள் வழங்கப்பட்டுள் ளன. பாரத ஸ்டேட் வங்கி பேட்டரி யில் இயங்கும் 14 மூன்று சக்கர வாகனங்களை வழங்கியுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் மிதி வண்டி, தள்ளுவண்டி போன்றவை முற்றிலுமாக நீக்கப்படும்.
இதர வங்கிகளும் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங் களும் தனியார் நிறுவனங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங் களும் துப்புரவு பணிக்கான மோட் டார் வாகனங்கள் வாங்குவதற்கு உதவ வேண்டும். சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் சாக் கடை நீரையோ, செப்டிக் டேங்க் கழிவுகளை கலந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப் படும். மழைநீர் கால்வாயில் சாக் கடை நீர் அல்லது செப்டிக் டேங்க் கலப்பது குறித்து தெருவாரியாக ஆய்வு நடத்தப்படுகிறது. தவறு செய்வோருக்கு நோட்டீஸ் அனுப்பி, அதைத் திருத்திக் கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகும் கழிவுநீரை மழைநீர் கால்வாயில் கலந்தால் அபராதம் விதிக்கப்படும்.
பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ரோபோட்டிக் இயந்திரம் மூலம் செய்வதற்கான சோதனை நடக்கிறது. அதிவேகமாக சாக்கடை அடைப்பை சரிசெய்யும் நவீன சக்கர் இயந்திரங்கள் 6 வாங்க வுள்ளோம். அவை வந்ததும் மழைக் காலங்களில் மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெறும்.
சென்னையில் உள்ள சுமார் ஆயிரம் பொதுக் கழிப்பிடங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து மாநகராட்சி இலவசமாக வும் கட்டணத்துடனும் தனி யார் நிறுவனங்களுடனும் தூய்மை யாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. தண்ணீரின் தரம் அறிவதற்காக நீரின் மாதிரி சென்னைக் குடிநீர் வாரியத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.