

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
பார்வையற்ற மாற்றுத்திறனாளி கள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடை யாளம் காண்பதற்காக, இன்டக்லியோ என்ற அச்சுப் பதிப்பின் மூலம் நோட்டு கள் அச்சிடப்படுகின்றன. இதன்மூலம், அவர்கள் ரூபாய் நோட்டுகளை தடவிப் பார்த்து அவற்றைக் கண்டறிய முடியும். தற்போது, ரூ.100 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள நோட்டுகளில் மட்டுமே இந்த வசதி உள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விதமாக, மொபைல் செயலியை (ஆப்) உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதன்படி, ரூபாய் நோட்டுகளை மொபைல் போன் கேமரா முன்பு காட்டி னால், அது என்ன நோட்டு என்பதை ஆடியோ மூலம் தெரிவிக்கும். இந்த செயலியை உருவாக்குவதற்கான பணி கள் நடைபெற்று வருகிறது. விரை வில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.