

சென்னை
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை தோட்டம் போல சென்னையில் முதன்முறையாக வண்ணாரப் பேட்டையில் உள்அரங்கத் தோட் டத்துடன்கூடிய (Indoor Garden) மரபியல் பூங்கா உருவாகி வருகிறது.
தோட்டக்கலைத் துறை சார்பில், சென்னை செம்மொழி பூங்கா, ஊட்டி தாவரவியல் பூங்கா உள் ளிட்ட 19 பூங்காக்கள் பராமரிக்கப் படுகின்றன. இதில், 5 சுற்றுச்சூழல் பூங்காக்களும் அடங்கும்.
தோட்டக்கலைத் துறையின் 20-வது பூங்கா சென்னை வண் ணாரப்பேட்டையில் 5 ஏக்கர் பரப் பளவில் ரூ.5 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்படு கிறது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி கூறியதாவது:
தோட்டக்கலைத் துறை சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தோட்டக்கலைத் துறை மரபியல் பூங்காவில், நடைப்பயிற்சி பாதை, குழந்தைகளுக்கான விளையாட் டுப் பகுதி, யோகா மையம், வாகன நிறுத்துமிடம், உணவகம், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.
நாட்டு மரங்களின் பயன் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், வேங்கை, வேம்பு, புங்கன், குமிழ்தேக்கு, தேக்கு, பூவரசு, இலுப்பை, வாகை, கொடுக்காப்புளி, புளி, விளாம், வில்வமரம், அரசு, ஆலமரம், பனை, தென்னை உள்ளிட்ட 250 நாட்டு மரங்கள் நடப்படுகின்றன.
மரத்தின் தாவரவியல் பெயர்
ஒவ்வொரு மரத்திலும் அதன் தாவரவியல் பெயர், மருத்துவ குணம், ஆயுள் காலம், மரத்தின் மதிப்பு, பொருளாதார மதிப்பு, தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் அந்த மரங்கள் உள்ளன, அதன் சிறப்பு அம்சம், முக்கியத்துவம் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட நிரந்தர தகவல் பலகை அமைக் கப்படுகிறது.
அதுபோல சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், உள் அரங்கப் பூங்கா (Indoor Garden) அமைக்கப்படுகிறது. நிழல்வலைக் கூடம் போல உருவாகும் நிரந்தர கட்டிடத்துக்குள் இத்தோட்டம் காண்போரைக் கவரும் வகையில் இருக்கும்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகைத் தோட்டம் போல் இது உருவாகிறது. இக் கட்டுமானம் முடிவடைந்ததும் நிழலில் வளரும் செடிகள் கண்டறி யப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.
பூங்காவுக்குள் பார்வை யாளர்கள் நுழைந்ததும், அவர் களுக்கு பூங்கா பற்றிய முழு விவரங்கள் ஒலி, ஒளிக் காட்சியாக காண்பிக்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளி காட்சி மையம் அமைக் கப்படுகிறது.
மரபியல் பூங்கா அமைக் கும் பணிகள் அடுத்த மூன்று மாதங் களில் நிறைவடையும். அதன் பிறகு இப்பூங்கா வடசென்னை யின் முக்கிய அடையாளமாகத் திகழும்.
இவ்வாறு அவர் கூறினார்.