

சென்னையில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசித்துள்ள காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமறைவு ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
கொலை, கொள்ளை, வழிப் பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங் கள் சென்னையில் ஆங்காங்கே நடந்து வருகின்றன. குற்றச் செயல்களை முற்றிலும் தடுத்து நிறுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், சென்னை யில் தற்போதைய சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் நேற்று ஆலோசித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகள், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விபரம், தலைமறைவு குற்றவாளிகள் விபரம், முடிக்கப்பட்ட வழக்கு கள், நிலுவையில் உள்ள வழக் குகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் காவல் ஆணையர் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் ஆர்.திருநாவுக்கரசு மற்றும் சுதாகரிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.
மேலும், ரவுடிகள் மோதலை முற்றிலும் ஒழிக்கவும், குற்றச் செயல்களை கட்டுக்குள் கொண்டு வரவும் தலைமறைவு ரவுடிகளைக் கைது செய்து சிறையில் அடைக்கவும் காவல் ஆணையர் போலீஸ் அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென் னையில் உள்ள 135 காவல் நிலைய போலீஸாரும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட ரவுடி களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல் ஆணை யர் அலுவலகத்தில் இயங்கி வரும் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு போலீஸாரும் களத்தில் இறங்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது