

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை (நவ.28) தொடங்குகிறது.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் கார்த் திகை தீபத் திருவிழா பிரசித்திப் பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை இரவு தீபத் திருவிழா தொடங்குகிறது. அன்றிரவு காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் உற்சவமும், 29-ம் தேதி இரவு சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவமும், 30-ம் தேதி இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவமும் நடைபெறுகிறது.
63 நாயன்மார்கள்
பின்னர், அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில் டிச.1-ம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதன்பிறகு, 10 நாள் உற்சவம் தொடங்குகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு வாக னங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா வருகின்றனர்.
இதில், டிச.6-ம் தேதி காலை நடைபெறும் ஆறாம் நாள் உற்சவ விழாவில் 63 நாயன்மார் களின் வீதியுலா மற்றும் இரவு 8 மணியளவில் வெள்ளி தேரோட்டம் நடைபெறும்.
மகா தேரோட்டம்
அதன்பிறகு மறுநாள் (டிச.7) காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் மகா தேரோட்டம் தொடங்குகிறது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியாக திருத்தேர்களில் வலம் வர உள்ளனர். ஒரே நாளில் 5 திருத்தேர்கள் வலம் வருவது என்பது கூடுதல் சிறப்பாகும்.
அர்த்தநாரீஸ்வரர் தரிசனம்
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் டிச.10-ம் தேதி ஏற்றப்படவுள்ளன. அண்ணா மலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்கு முன்பாக, கோயி லில் உள்ள தங்கக்கொடி மரம் முன்பு ஆண்-பெண் சமம் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில், அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சி தருகிறார்.
இதையடுத்து, ஐயங்குளத்தில் 3 நாட்களுக்கு (டிச.11 முதல் 13-ம் தேதி வரை) சந்திரசேகரர், பராசக்தி அம்மன், சுப்ரமணியர் ஆகியோரது தெப்ப உற்சவம் நடை பெறும். இதற்கிடையில், பக்தர் களைப் போல், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் டிச.12-ம் தேதி கிரிவலம் வர உள் ளார். பின்னர், வெள்ளி ரிஷப வாக னத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவத் துடன் டிச.14-ம் தேதி கார்த்திகைத் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.
தீபத் திருவிழாவுக்கு சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகி யவை இணைந்து விரிவான ஏற் பாடுகளை செய்து வருகின்றன. பக்தர்களுக்காக சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட வுள்ளன.