கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை மூடக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் வைகோ தம்பி மனு

கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை மூடக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் வைகோ தம்பி மனு
Updated on
1 min read

நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி யிலுள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வைகோவின் தம்பி வை.ரவிச்சந்திரன் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெரு மாள் உயிரிழந்தார்.

இதையடுத்து கலிங்கப் பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் போராட்டம் நடத்தினர். அப்போது கலிங்கப்பட்டி டாஸ் மாக் கடையை சிலர் தாக்கி சேதப்படுத்தினர். போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரை கலைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வைகோ, அவரது தம்பி வை.ரவிச் சந்திரன் உட்பட 52 பேர் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கலிங்கப்பட்டி யில் செயல்படும் டாஸ்மாக் கடையை (எண் 10862) மூட உத்தரவிடக்கோரி வைகோவின் தம்பியும், கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவருமான வை.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறி யிருப்பதாவது:

கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை, எங்கள் கிராமத்தில் நடைபெறும் அனைத்து மோசமான செயல் களுக்கும் கூடாரமாகத் திகழ் கிறது. கூலி வேலைக்கு செல்பவர் கள் முழுப்பணத்தையும் மதுபானத் துக்கே செலவிடுகின்றனர். போதையில் பெண்களிடம் சண்டையிடுகின்றனர்.

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்தபோது, டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என ஊராட்சி யில் தீர்மானம் நிறைவேற்றினோம். இருப்பினும் மக்கள் நலனின் மீது அக்கறை கொள்ளாமல், வருமானத்துக்கு ஆசைப்பட்டு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப் பட்டது.

இந்த கடையால் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அதிகமாக பாதிக்கப் பட்டு வருகின்றனர். இதனால் டாஸ்மாக் கடையை மூடக்கோரி 4.8.2015-ல் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினோம். இருப் பினும் அதிகாரிகள் கடையை அகற்றாமல் உள்ளனர். இதனால் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, கலிங்கப் பட்டியில் டாஸ்மாக் கடை செயல்பட தடை விதிக்க வேண் டும். அந்த கடையை மூட உத்தர விட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in