

டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் வெளி யான வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனைக் கைதி 8 மாதங்களுக்குப் பிறகு திருச்சி போலீஸாரால் நேற்று புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பண் ருட்டி அருகேயுள்ள பத்திரக்கோட் டையைச் சேர்ந்தவர் தவமணி(28). 2012-ல் கடலூரில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண் டனை பெற்ற இவர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2005 முதல் 2010 வரை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளின்போது வினாத் தாள்கள் முன்கூட்டியே வெளி யான வழக்கிலும் இவர் குற்றவாளியாகச் சேர்க்கப் பட்டுள்ளார்.
2013-ல் மகாராஷ்டிர மாநிலம் சிவாஜி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தவமணியின் நண்பரான அனில் என்பவர் கொலை செய்யப்பட்டார். திருச்சி சிறையிலிருந்த தவமணி யின் தூண்டுதலால் அவர் கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சி ஆயுதப்படை போலீஸார் 2014 நவம்பர் மாதம் தவமணியை ரயிலில் புனே நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மீண்டும் அவர்கள் ரயிலில் திருச் சிக்குப் புறப்பட்டனர். நவம்பர் 27-ம் தேதி கர்நாடக மாநிலம் குல்பர்கா என்ற இடத்தில் வந்தபோது, தவமணி ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுவிட்டார். அவரைத் தப்பவிட்டது தொடர்பாக எஸ்.ஐ. உட்பட 5 பேரும், தவமணிக்கு உதவியதாக திருச்சி மத்திய சிறைக் காவலர்கள் 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர் புடைய சில முக்கியப் பிரமுகர் கள் திட்டம் வகுத்துக் கொடுத்து தவமணியை தப்ப வைத்த தாகவும், இதற்காக பல லட்சம் செலவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தலைமறைவான தவமணியைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரியில் ஒரு வீட்டில் தவமணி பதுங்கி யிருப்பதாக திருச்சி போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி போலீஸார் புதுச்சேரி சென்று நேற்று அதி காலை தவமணியை கைது செய் தனர். அவரிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் நீண்டநேரம் விசாரணை நடத்தினார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தவமணி,ன திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.