மதுவிலக்கு போராட்டம் திசைமாறி செல்கிறது: கி.வீரமணி எச்சரிக்கை

மதுவிலக்கு போராட்டம் திசைமாறி செல்கிறது: கி.வீரமணி எச்சரிக்கை
Updated on
1 min read

டாஸ்மாக் கடைகள் மீது தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்களால் மதுவிலக்கு போராட்டம் திசைமாறி செல்கிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து மதுவுக்கு எதிராக ஆளுங்கட்சி தவிர அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவர்கள், பெண்கள் உட்பட பலரும் போராடி வருகின்றனர். மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் மீது தடியடி, மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி போன்றவை அதீதமான நடவடிக்கையாகும்.

கடந்த 10-ம் தேதி பிரதான எதிர்க்கட்சியான திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியாக நடந்தது பாராட்டுக்குரியது. ஆனால், சில கட்சிகள் மதுவிலக்கு கோரி போராட தங்களுக்கு மட்டுமே காப்புரிமை இருப்பதுபோல பேசி வருவது ஏற்புடையது அல்ல.

இந்த கட்சியினர்தான் மது உற்பத்தி ஆலைகளை நடத்து கிறார்கள் என குற்றம் சாட்டுவது சரியான வாதம் அல்ல. அரசு மது விற்பதால்தான் அந்த ஆலைகளில் மது தயாரிக் கின்றனர். இங்கே இல்லாவிட்டால் வெளிநாடுகளுக்கு அனுப்புவர்.

டாஸ்மாக் கடைகள் மீது தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு, ஊழியர்கள் மீது தாக்குதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் என மதுவிலக்கு போராட்டம் திசைமாறி செல்கிறது. சமூக விரோதிகள் இதைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் நமது எதிரிகள் அல்ல. தமிழக அரசு மதுவிலக்கை அறிவிக்க அனை வரும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும். மாறாக வன்முறையில் இறங்கினால் மதுவிலக்கு போராட்டம் திசைதிரும்பிவிடும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in