

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயமாகிறது. கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் பழனிசாமி புதிய மாவட்டத்தை தொடங்கி வைக் கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த ஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர் என வருவாய் கோட்டங்களை உள்ளடக்கிய புதிய கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மேம்பாலம் அருகே சாமியார் மடம் மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் புதிய மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். விழாவின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார்.
7 பேரூராட்சிகள்
அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக் கோவிலூா், உளுந்தூா்பேட்டை, கல்வராயன்மலை (புதியது) என வருவாய் வட்டங்களும், திருக் கோயிலூர், சங்கராபுரம், தியாக துருகம், சின்னசேலம், வடக்கனந் தல், மணலூர்பேட்டை, உளுந்தூர் பேட்டை என 7 பேரூராட்சி களும் இடம்பெற்றுள்ளன.
5 பேரவைத் தொகுதிகள்
கள்ளக்குறிச்சி (தனி), உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் என 5 சட்டப் பேரவைத் தொகுதி களும், கள்ளக்குறிச்சி (பகுதிய ளவு) விழுப்புரம் (பகுதியளவு) மக்களவைத் தொகுதிகளும் இந்த புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளன.