Published : 26 Nov 2019 08:23 AM
Last Updated : 26 Nov 2019 08:23 AM

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டவர் கைது

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டவரை மணப்பாறை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கொட்டப்பட்டியைச் சேர்ந்த ராசு மகன் அயோத்யா கண்ணன்(49). இவர், உறுப்பினராக உள்ள ஒரு வாட்ஸ் அப் குழுவில், இந்து- முஸ்லிம் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாகக் கூறி தொப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பெரியண்ணன்(37) மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இ.த.ச 153(ஏ), (பி), 504, 505(1) (பி) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்து அயோத்யா கண்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறியபோது, ‘‘பாஜக உறுப்பினரான இவர், முகநூல் மற்றும் வாட்ஸ்அப்-ல் பாபர் மசூதியை இடித்தபோது அங்கிருந்து எடுத்து வந்த செங்கல் எனக் குறிப்பிட்டு, அதை அவமதிப்பது போல புகைப்படம் பதிவிட்டிருந்தார். இது, இரு மதத்தினரிடையே கலவரத்தைத் தூண்ட வழிவகுக்கும் என்பதால் அவரை கைது செய்துள்ளோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x