‘இ-விதான்’ திட்டம் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி: சட்டப்பேரவை செயல்பாடுகள் விரைவில் டிஜிட்டல் மயம்

‘இ-விதான்’ திட்டம் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி: சட்டப்பேரவை செயல்பாடுகள் விரைவில் டிஜிட்டல் மயம்
Updated on
2 min read

சட்டப்பேரவை செயல்பாடுகளை டிஜிட்டல்மயமாக்கும் ‘இ-விதான்’ திட்டம் குறித்து சட்டப்பேரவை செயலக அலுவலர்களுக்கான பயிற்சியை பேரவைத் தலைவர் பி.தனபால் நேற்று தொடங்கி வைத்தார்.

அனைத்து மாநில சட்டப்பேர வைகள் மற்றும் யூனியன் பிரதேசங் களின் பேரவை, மேலவை நிகழ்வு களை ஒரே இணையதள பக்கத் தில் கொண்டுவரும் நோக்கில், மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இதற்காக ‘நேஷனல் இ-விதான்-நேவா’ அதாவது ‘காகிதமில்லா சட்டப்பேரவை’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக சட்டப் பேரவை செயலக அலுவலர்களுக் கான 2 நாள் பயிற்சி வகுப்பை பேரவைத் தலைவர் பி.தனபால் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் பேசியதாவது:

‘காகிதமில்லா சட்டப்பேரவை’ செயல்படுத்துவதன் மூலம் காகிதப் பயன்பாடு வெகுவாகக் குறைக்கப்படும். அதேபோல், அஞ்சலகச் செலவு உள்ளிட்ட இதர செலவுகளும் குறைக்கப்படும். இதன்மூலம் வேகமாக தொடர்பு கொள்ளுதல் மற்றும் முடிவுகள் எடுப்பதற்கும் வழி ஏற்படும்.

சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் நாட்களில் பேரவை நிகழ்ச்சி நிரல், வினாப்பட்டியல், மானிய கோரிக்கைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகள், குழுக்கூட்டங்கள் குறித்த குறிப்பு கள் ஆகியவை மின்னஞ்சல் மூலம் உறுப்பினர்களுக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.

மேலும், பேரவை முன் வைக்கப் படும் ஏடுகள், ஆவணங்கள், 14 மற்றும் 15-வது சட்டப்பேரவை அதிகாரப்பூர்வ அச்சிட்ட நடவ டிக்கை குறிப்புகள், உறுப்பினர் களின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ‘யார் - எவர்’ ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மாநில அளவிலான ‘நேவா’ திட்டத்தை செயல்படுத்தும் குழு, மாநில திட்ட மேலாண்மை பிரிவு மற்றும் பேரவைத் தலைவர் தலைமையிலான அவைக்குழு ஆகியவற்றை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேரவை செயலர் கே.சீனிவாசன் பேசியதாவது:

நேவா திட்டம் காகிதமில்லா சட்டப்பேரவை அல்லது இ-அசெம் பிளி என்ற நோக்கத்தின் அடிப் படையில், சட்டப்பேரவை பணி களை மின்மயமாக்குவதாகும். இது சட்டப்பேரவையில் அனைத்து சட்டம் இயற்றும் வழிமுறை களையும் தானியங்கி முறையில் எளிமைப்படுத்துவதுடன், முடிவு கள் மற்றும் ஆவணங்களைக் கண்காணிப்பதற்கும், தகவல் களைப் பரிமாறவும் வழிவகுக்கும்.

இந்தத் திட்டம் அனைத்து மாநில சட்டப்பேரவை மற்றும் மேலவைகளையும் ஒன்றிணைத்து, அவை தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய இமாலய தரவுக் களஞ்சியத்தை உருவாக்குவதை யும், பல செயலிகளின் பயன் பாடுகள் இல்லாமல், ஒரே தளத்தின் கீழ் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் உள்ளது.

நேவா திட்டத்தின் மூலம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் கையடக்க சாதனங்கள் வாயிலாக தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பேரவை நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல் களை அறிந்து கொள்ள முடியும். பொதுமக்களும் எளிதாக தகவல் களைப் பெறலாம்.

வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் நடைபெற உள்ள சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது, அவை முன் வைக்கப்படும் ஏடுகள் அனைத்தையும் மின்னஞ்சல் மூலமாகவே உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக மின்ஆளுமை நிறுவன ஆணையர் சந்தோஷ் கே மிஸ்ரா, எல்காட் மேலாண் இயக்குநர் எம்.விஜயகுமார், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அர்பிட்தியாகி, சமீர் வர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in