தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட அனுமதிக்க வேண்டும்: அமித் ஷாவிடம் மாநில நிர்வாகிகள் வலியுறுத்தல்

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட அனுமதிக்க வேண்டும்: அமித் ஷாவிடம் மாநில நிர்வாகிகள் வலியுறுத்தல்
Updated on
2 min read

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தி யுள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணி கட்சிகள் தங்க ளுக்கு மேயர் பதவிகளை கேட்டு வந்தன. கோவை, திருப்பூர், நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாநகராட் சிகளின் பட்டியலைக் கொடுத்து 2 மேயர் பதவிகளை பாஜக கேட் டது. 2 மேயர் பதவிகளை பாஜக கேட்பதாக அமைச்சர் டி.ஜெயக் குமார் தெரிவித்தார்.

ஆனால், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. இது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை பாஜக வைத்துள்ளது. கடந்த 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, இந்த மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.

எனவே, இந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 மேயர் பதவிகளை பிடித்து அதன் மூலம் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தலாம் என்று நம்பிக்கை யுடன் இருந்தது. மறைமுகத் தேர் தல் மூலம் பாஜகவின் இந்த நம்பிக்கையை அதிமுக தகர்த் துள்ளது. பாஜகவுக்கு மேயர் பதவி சென்று விடக்கூடாது என்பதற் காகவே மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகி கள் மேலிடத்தில் புகார் தெரிவித் துள்ளனர்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் பி.முரளி தர ராவ் ஆகியோரிடம் தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பாஜக முக்கி யத் தலைவர் ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சியில் நீடிப் பதற்காகவும் வழக்குகளில் இருந் தும், வருமானவரித் துறை, அமலாக் கத் துறை சோதனைகளில் இருந் தும் தப்பிப்பதற்காகவும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக இருப் பதுபோல அதிமுகவினர் காட்டிக் கொள்கின்றனர். அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்பதால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதிமுகவின் செயல்பாடுகளை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

இதை சாதகமாக பயன்படுத்தி, தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் பாஜகவை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு சிறிய கட்சிகளின் தலைவர்களைக்கூட 5 அமைச்சர்கள் சென்று சந்தித்தனர். ஆனால், பாஜக அலுவலகத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே வந்தார். இவ்வாறு தொடர்ந்து தமிழக பாஜக சந்தித்து வரும் அவமானங்களை மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பக்கம் அவமானம் என்றால் பாஜகவின் அடிப்படை கொள்கைகளையே தகர்க்கும் வகையிலான பல்வேறு முடிவு களை அதிமுக அரசு எடுத்துள்ள தாக மற்றொரு பாஜக நிர்வாகி வேதனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக 'இந்து தமிழ்' நாளிதழிடம் பேசிய அவர், ‘‘இந்து கோயில்கள் அரசின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். கோயில் சொத்துகள் அனைத்தும் கோயில்களுக்கு மட்டுமே சொந்த மானவை என்பதே பாஜகவின் கொள்கை. ஆனால், கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அதிமுக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்து மதத்தையும், கோயில், கடவுள் களையும் சமூக ஊடகங்களில் அவமதித்து பதிவிட்ட பலர் மீது புகார் தெரிவித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எதிர்தரப்பினர் புகாரின் அடிப்படையில் பாஜகவினரும், பாஜக ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையும் மேலிடத் தலைவர்களிடம் கூறி யுள்ளோம்’’ என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி அமைத்தாலும் மிகக் குறைவான இடங்களையே தருவார்கள். தனித்துப் போட்டி யிட்டால் கோவை, திருப்பூர், கன்னி யாகுமரி, தூத்துக்குடி, திருநெல் வேலி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கணிசமான இடங்களில் வெல்ல முடியும். எனவே, தனித்துப் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழக பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in