Published : 26 Nov 2019 07:53 AM
Last Updated : 26 Nov 2019 07:53 AM

முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கில் முன்னாள் தலைமை செயலர் சாட்சியம்

முன்னாள் அமைச்சர் இந்திரகு மாரிக்கு எதிரான வழக்கில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சாட்சியம் அளித்தார்.

கடந்த 1991 முதல் 1996 வரை யிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் இந்திரகுமாரி. அந்த காலகட்டத்தில் அவரது கணவர் பாபு நடத்தி வந்த வாய் பேசமுடியாத, காதுகேளாத குழந்தைகளுக்கான அறக்கட் டளைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.15.45 லட்சம் முறையாக செலவிடப் படவில்லை என குற்றம்சாட்டப் பட்டது. அதையடுத்து இதுதொடர் பாக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்பாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில் சமூக அறக்கட்டளைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரியாக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதவி வகித்தார். இதனால் அவர் இந்த வழக்கில் சாட்சியாக உள்ளார். இந்நிலையில் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி அரசு தரப்பில் சாட்சியம் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x