

சமையல் காஸ் சிலிண்டர்களுக் கான கட்டண ரசீதில் மானியத் தொகை குறித்த விவரத்தை முன்பு போல் அச்சிட்டு வழங்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் 14.20 கிலோ எடையுள்ள வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர்களை மானிய விலையில் விநியோகம் செய்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு சிலிண்டர்களுக்கான மானி யத்தை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
வங்கிக் கணக்கில் வரவு
இதன்படி, வாடிக்கையாளர்கள் சந்தை விலைக்கு சமையல் காஸ் சிலிண்டர்களை வாங்க வேண் டும். அதற்கான மானியம் பின்னர் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும், இந்த நடைமுறையில் மோசடிகள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில், வங்கிக் கணக்குடன் வாடிக்கையாளர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டது. மேலும், வீடுகளுக்கு சிலிண்டர் விநி யோகம் செய்யும்போது, ஏஜென்சி சார்பில் வழங்கப்படும் ரசீதில் சிலிண்டர் விலை, மானியத் தொகை விபரங்கள் இடம் பெற் றிருக்கும். ஆனால், சமீபகாலமாக வழங்கப்படும் ரசீதில் மானியத் தொகை குறித்த விவரம் இடம் பெறவில்லை.
இதுகுறித்து, வாடிக்கை யாளர்கள் கூறியதாவது:
முன்பு சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ரசீதில் குறிப் பிடப்பட்டிருக்கும். இதனால், அதை வைத்து வங்கியில் செலுத் தப்படும் மானியத் தொகையை சரிபார்க்க முடியும்.
சரிபார்க்க முடியவில்லை
ஆனால், தற்போது ரசீதில் மானியத் தொகை குறிப்பிடப்படாத தால், வங்கிக் கணக்கில் செலுத்தப் படும் தொகை குறைவாக உள்ளதா அல்லது கூடுதலாக உள்ளதா என சரிபார்க்க முடியவில்லை. எனவே, பழைய முறைப்படி மானியத் தொகையை ரசீதில் எண்ணெய் நிறுவனங்கள் குறிப் பிட வேண்டும்.
இவ்வாறு எண்ணெய் நிறு வனங்களை வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.