Published : 17 Aug 2015 12:05 PM
Last Updated : 17 Aug 2015 12:05 PM

சேஷசமுத்திரம் வன்முறை: காயமடைந்த போலீஸாருக்கு தமிழக அரசு நிதியுதவி

விழுப்புரம் - சேஷசமுத்திரம் வன்முறையில் காயமடைந்த போலீஸாருக்கும், கிராம உதவியாளர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் திருவிழா தொடர்பாக 15.8.2015 அன்று இருதரப்பினருக்கு இடையே சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்ட போது சிலர் வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வன்முறை செயல்களில் ஈடுபட்ட நபர்களை தடுத்த காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்கள் விவரம்:

* சங்கராபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குழந்தைவேலு

* முதல் நிலைக் காவலர்கள் பாலமுருகன், ராஜன்பாபு, சரவணன்

* விழுப்புரம் மாவட்ட ஆயுதப் படை காவலர்கள் ரஞ்சித்குமார், பரமேஸ்வர பத்மநாபன், யுவராஜ், சரவணன்

* வருவாய்த் துறையைச் சேர்ந்த வளையாம்பட்டி கிராம உதவியாளர் செல்வம்

* மஞ்சபுத்தூர் கிராம உதவியாளர் பாலுசாமி

* கல்லேரிக்குப்பம் கிராம உதவியாளர் கணேசன்

இவர்கள் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். இந்த வன்முறை சம்பவத்தில் காயமடைந்த காவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 50,000/- ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x