அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,200 மெ.வா சோலார், காற்றாலை மின் உற்பத்தி: ரயில்வே துறை திட்டம்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,200 மெ.வா சோலார், காற்றாலை மின் உற்பத்தி: ரயில்வே துறை திட்டம்
Updated on
1 min read

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், ரயில்வேயின் மின்சார செலவை குறைக்கும் வகையிலும் புதுப்பிக்கதக்க மின்சாரத்தின் பயன்பாட்டை அதிகரிக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ரயில்வேக்கு சொந்தமான காலி இடங்கள், ரயில் நிலையங்கள், ரயில்களின் மேற்கூரைகளில் சோலார் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் வாய்ப்புள்ள இடங்களில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில்வேயில் டீசல் செலவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் புதுப்பிக்கதக்க எரிசக்தி திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.

அதுபோல், ரயில் நிலையங்களிலும் புதுப்பிக்கதக்க எரிசக்திகளைநிறுவி, மின்சார பயன்பாட்டை குறைத்து வருகிறோம். குறிப்பாக, ரயில் நிலையங்கள், தொற்சாலைகள், அலுவலகங்களில் ஏற்கெனவே இருந்த மின்விளக்குகளை நீக்கிவிட்டு எல்இடி விளக்குகளை பயன்படுத்தி வருகிறோம். இதனால், மின்கட்டண செலவு குறைந்து ஆண்டுதோறும் ரூ.180 கோடி வரையில் சேமிக்க முடிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள ரயில்நிலையங்கள் மற்றும் காலியாக உள்ள இடங்களை தேர்வு செய்துஅதில், சோலார் மற்றும் காற்றாலை கருவிகளை நிறுவதற்கான பணியை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் 82.42 மெகா வாட் அளவுக்கு சோலார் கருவிகளை அமைத்தும், 53 மெகா வாட் அளவுக்கு காற்றாலைகளை நிறுவியும் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறோம். மேலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,000 மெகா வாட் அளவுக்குசோலார், 200 மெகா வாட் அளவுக்கு காற்றாலை மின்சாரத்தைஉற்பத்தி செய்ய ரயில்வே துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in