கற்கள், துருப்பிடிக்காத வலைக்கம்பிகள் மூலம் தடுப்புச்சுவர்: நிலச்சரிவைத் தடுக்க நெடுஞ்சாலைத்துறை புதிய திட்டம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பகுதியில் கட்டப்பட்டுவரும் கம்பிவலை தடுப்புச் சுவர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பகுதியில் கட்டப்பட்டுவரும் கம்பிவலை தடுப்புச் சுவர்.
Updated on
1 min read

உதகை

உதகை-மேட்டுப்பாளையம் சாலை யில் மந்தாடா பகுதியில் மணல், சிமென்ட் பயன்படுத்தாமல் புதிய தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட்டுவரும் கம்பிவலை தடுப்புச் சுவர்கள் வரவேற்பை பெற்றுள்ளன.

மலை மாவட்டமான நீலகிரி மண் சரிவு அபாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. மழை பெய்தாலே பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்படும். நீலகிரி மாவட்டத்தில், பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளிலும் பள்ளத் தாக்குகளின் முகப்புப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகள் மிக குறுகலாகவும், அதிக கொண்டை ஊசி வளைவு களுடனும், செங்குத்தாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை யில் குறுகலாக இருந்த இடங்கள், விபத்து ஏற்படும் இடங்கள் கண்ட றியப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

உதகை அருகே மந்தாடா, குன்னூர் காட்டேரி பகுதியில் கட்டப்பட்டும் பெரிய தடுப்புச் சுவர்கள் நவீன முறையில் கற்கள், கம்பி வலைகளின் உதவி யுடன் கட்டப்பட்டுவருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது,

‘‘கேபியன் வால் (Gabion wall) என்பது, கற்கள் மற்றும் துருப்பிடிக்காத வலைக்கம்பி களைக் கொண்டு கட்டப் படுவதாகும்.

நாகாலாந்து மாநிலத்தில் இந்த முறையில் கட்டப்பட்ட சுவர்கள் நல்ல முறையில் உள்ளன. இதே முறையைப் பயன்படுத்தி மந்தாடா பகுதியில் 86 மீட்டர் நீளம், 13 மீட்டர் உயரத்தில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த முறை கட்டுமானத்துக்கு மணல், சிமென்ட் அதிகம் தேவைப்படாது. எவ்வளவு மழை பெய்தாலும் இடிந்து விழாமல் நீரை வெளியேற்றி தாங்கிநிற்கும். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.

உதகை-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இத்தகைய சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in