

நாகை அருகே வயலில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பயணிகள் காயமடைந்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண் யத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று திருவாரூருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தில், திருவாரூரை அடுத்த வேல்குடியைச் சேர்ந்த ரமேஷ்(41) ஓட்டுநராகவும், திருவாரூர் காட்டாத்துக்குளத்தைச் சேர்ந்த ராஜா(33) நடத்துநராகவும் இருந்தனர்.
தலைஞாயிறை அடுத்த ஆலங் குடி அருகே பேருந்து சென்ற போது, எதிரே வந்த காருக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் ரமேஷ் பேருந்தை இடதுபுறமாக ஒதுக்கினார். அப்போது, மழை கார ணமாக சாலையோரத்தில் சகதி யாக இருந்ததால், அருகிலிருந்த வயலில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது.
இதில், காயமடைந்த 25 பயணி கள் நாகை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 2 பேரைத் தவிர மற்ற வர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். நடத்துநர் ராஜாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தலைஞாயிறு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.