

இலங்கைத் தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களைக் காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடு துறையில் தமிழர் தேசிய முன்ன ணியின் மாவட்டத் தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமை யில் 5 மாவட்ட நிர்வாகிகள் கலந் தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற் றது. கூட்டத்தில் பங்கேற்ற அந்த அமைப்பின் தலைவர் பழ.நெடு மாறன், பின்னர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு 2009-ம் ஆண்டு வந்த 3 லட்சம் ராணுவ வீரர்கள், தற்போது வரை அங்குதான் உள்ளனர்.
இலங்கை அரசு தற்போது கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம் புதிதாக ராணுவத்தைக் கொண்டு வருவதற்கான சட்டம் அல்ல. ஏற்கெனவே அங்கு இருக்கின்ற ராணுவத்துக்கு அதிக அதிகாரத்தை அளிக்கும் சட்டம்.
அங்கு புதிதாக அமைந்த ஆட்சியில் இலங்கைத் தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களைக் காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறியதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதைக் கண்டிக் காமல், விடுதலைப் புலிகளால் சோனியா காந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று டி.ஆர்.பாலு கூறியிருப்பது வீண் பழி. இவ்வாறு பழ.நெடுமாறன் கூறினார்.