

சிதம்பரத்தில் செவிலியரை தாக் கிய தீட்சிதர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 16-ம் தேதி இரவு அர்ச்சனை செய்ய சென்ற லதா என்ற செவிலியரை தர்ஷன் என்கிற நடராஜ தீட்சிதர் தரக்குறைவாக பேசி அறைந்தார். இதுகுறித்து லதா அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீஸார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய் தனர். இதற்கிடையில் தீட்சிதர் தலைமறைவானார்.
இதைத்தொடர்ந்து 2 தனிப் படைகள் அமைத்து தீட்சிதரை தீவிரமாக தேடி வந்தனர். நடராஜ தீட்சிதர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத் ததைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் கடந்த சில நாட் களாக சென்னையில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நடராஜ தீட்சிதர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (நவ.25) விசாரணைக்கு வருகிறது.