Published : 25 Nov 2019 09:27 AM
Last Updated : 25 Nov 2019 09:27 AM

மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கையில் உறுதி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்க வேண் டும் என்று அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மாநில சுயாட்சி, இரு மொழிக் கொள்கையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் அதிமுக பயணிக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானங் களின் விவரம்:

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்பதுதான் அதிமுகவின் உறுதி யான கொள்கை. மாநில சுயாட்சி, இரு மொழிக் கொள்கை, மாநில அர சுகளுக்கு அரசியல் சட்டம் உறுதி யளித்த உரிமைகளை காத்தல், எல்லோரும் பயன்பெறும் கல்வி முறை என்பனவற்றில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பயணித்த பாதையிலேயே அதிமுக என்றென்றும் பயணிக்கும்.

சமூக நிதியை நிலைநாட்டவும் கிராமப்புற மாணவர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் தங்களுக்குரிய வாய்ப்பை பெற நீட் தேர்வு தடைக்கல்லாக உள்ளது. எனவே, நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். எல் லோருக்கும் சமநீதி வழங்கும் வகையில், மருத்துவ பட்டமேற் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ரூ.7,825 கோடி நிலுவை தொகை

கொள்ளிடம் கால்வாய் பாசனத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு முழுமையாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ரயில்வே, விமானப் போக்குவரத்து திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். கோவையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு நேரடி விமானப் போக்குவரத்து தொடங்க வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.7,825 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட் ரல் ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டியதற்கும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டியதற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், ஆதரவளித்த அமைப்புகள், வாக்காளர்களுக்கு நன்றி.

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு, முதல் வரின் சிறப்பு குறைதீர்வு கூட்டம், காவிரி - கோதாவரி, காவிரி - அக்னி யாறு - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி, புயல், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான மறுவாழ்வுப் பணிகள், அத்திக்கடவு - அவி னாசி திட்டத்தை நிறைவேற்ற ரூ.1,600 கோடி ஒதுக்கீடு, கள்ளக் குறிச்சி, தென்காசி, செங்கல் பட்டு, திருப்பத்தூர், ராணிப் பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங் கள் உருவாக்கம், தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், குடிமராமத்து திட்டம், பிளாஸ் டிக் ஒழிப்பு ஆகியவற்றை செயல் படுத்திய முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டாலினுக்கு கண்டனம்

பதவி ஆசையை லட்சியமாக கொண்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் சாதனைகளை மறைக்க முயற் சித்து வரும் பொய்ப் பிரசாரங் களுக்கு கண்டனம். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றி உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரங்கல் தீர்மானம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பாரிக்கர், ராம் ஜெத்மலானி, ஜார்ஜ் பெர்னாண் டஸ், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், நெல் ஜெயராமன், திரைப்பட இயக்குநர் மகேந்திரன், நடிகர் கிரேஸி மோகன் உள் ளிட்ட 246 பேர் மறைவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தெரி வித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசின் சாதனைகளை மறைக்க முயற்சித்து வரும் பொய்ப் பிரசாரங்களுக்கு கண்டனம். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x